ட்ரம்ப்பிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற முயலும் அதிகாரிகள்: அதிர வைத்த கட்டுரை 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் விளைவுகளில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற மூத்த அதிகாரிகள் முயலுவதாக வெளியான செய்திக் கட்டுரையால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.  
ட்ரம்ப்பிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற முயலும் அதிகாரிகள்: அதிர வைத்த கட்டுரை 

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் விளைவுகளில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற மூத்த அதிகாரிகள் முயலுவதாக வெளியான கட்டுரையால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.  

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர் தொடர்பான நடவடிக்கைகள், அண்டை நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் போன்றவற்றில் அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பலவிதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த முடிவுகளின் காரணமாக அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கும் சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் மதிப்புக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே புகார் கூறி வருகிறார்கள். அதிபர் ட்ரம்ப்பின் சொந்த கட்சியிலும் கூட இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் விளைவுகளில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற மூத்த அதிகாரிகள் முயலுவதாக வெளியான கட்டுரையால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.  

அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகை நியூயார் டைம்ஸ். இந்த பத்திரிகையானது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த பத்திரிகையில் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் விளைவுகள் தொடர்பான தலையங்க கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையில் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உள்வட்டத்தில் செயல்படும் மூத்த அதிகாரி ஒருவரது கருத்துக்கள் மேற்கொள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை. அதில் அதிபர்  டிரம்பின் அன்பற்ற அணுகுமுறை, சிக்கலான வெளிநாட்டு விஷயங்களில் தெளிவில்லாமல் எடுக்கும் மோசமான நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தும் பொருளாதார பிரச்சனைகளில் டிரம்ப் எடுக்கும் முடிவுகள் காரணமாக அமெரிக்கா பின்னுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் விளைவுகளில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற மூத்த அதிகாரிகள் முயலுகின்றனர் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் இந்தக் கட்டுரை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்த செய்தி முற்றிலும் போலியானது. நியூயார் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையை எழுதி இருப்பவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. இது அவர் தைரியம் இல்லாதவர் என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com