
பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்புடைய 103 போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தொடர்புடைய 103 போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர், பாகிஸ்தான் நாட்டின் தொடர்புடைய செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன. இதன்மூலம் போலியான, தவறாக வழிநடத்தக்கூடிய பதிவுகள் இடம்பெற்று வந்தன. அந்தந்த கணக்குகளுடன் தொடர்புடையவர்கள் இச்செயலை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.
எனவே போலி செய்திகளை பதிவிட்டு வந்ததால் இந்த 103 ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கியுள்ளோம் என்றிருந்தது. முன்னதாக, தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த சோதனையின் போது காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 கணக்குகளை ஃபேஸ்புக் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.