ஒட்டிப் பிறந்த பங்களாதேஷ் இரட்டையர்கள் பிரிக்கப்பட்டது எப்படி? சில்லரிக்கும் தகவல்கள்

வங்கதேசத்தில் தலையொட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள், தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர்.
ஒட்டிப் பிறந்த பங்களாதேஷ் இரட்டையர்கள் பிரிக்கப்பட்டது எப்படி? சில்லரிக்கும் தகவல்கள்


டாக்கா: வங்கதேசத்தில் தலையொட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள், தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர். 

எம்ப்ரையாலஜிகல் டிஸ் ஆர்டர் எனும் நோயால் இரு குழந்தைகளும் பாதிக்கப்பட்டதை அடுத்து இருவரையும் பிரிக்கும் அறுவை கிசிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நோயானாது 50 லட்சம் முதல் 60 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்குத்தான் ஏற்படும்.

கடைசி கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரு குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும், வேகமாக அவர்களது உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

தலைப் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை, திசு விரிவாக்கத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட திசுக்களை ஹங்கேரியில் இருந்து கொண்டு வந்து மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரண்டு குழந்தைகளும் மூளை நரம்புகளை பகிர்ந்து கொண்டிருந்தன. அவற்றை பிரிக்க மட்டுமே 14 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தலையொட்டிப் பிறந்த ரபேயா, ருகாயா (3) ஆகிய இரு சிறுமிகளும் டாக்காவிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர். ஹங்கேரியிலிருந்து வந்திருந்த 35 மருத்துவர்களைக் கொண்ட குழு, சுமார் 30 மணி நேரம் போராடி அதற்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது. 

மண்டையோடும், மூளையும் ஒட்டியிருந்த அந்த இருவரையும் பிரித்தால், அவர்கள் இருவருமே உயிர் பிழைப்பதற்கு 50 சதவீத வாய்ப்பே உள்ளதாக அறுவை சிகிச்சைக்கு முன்னர் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

எனினும், தற்போது அந்த இரு சிறுமிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனது குழந்தைகளை நான் என் கண்களால் பார்த்தேன். அவர்கள் தற்போது நன்றாக இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com