
சூடானில் இரு பழங்குடியின குழுக்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 37 பேர் உயிரிழந்தனர், 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
கிழக்கு சூடான் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் இரு பழங்குடியின தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பானி அமெர், நூபா ஆகிய இரு பழங்குடியின தரப்புக்கும் இடையே சூடான் தலைநகரில் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு ஆளுநரை பதவி நீக்கம் செய்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கலவரம் தொடர்பாக விசாரிக்க தனி ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.