பாகிஸ்தானின் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை

பாகிஸ்தானின் வான் எல்லையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்கவும், வர்த்தக பரிமாற்றத்திற்கான
பாகிஸ்தானின் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வான் எல்லையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்கவும், வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தானிடம் இருந்து வலுவான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன.

இதையடுத்து தவறான தகவல்களை வதந்திகளைப் பரப்பி விரும்பத்தகாத விளைவுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசி இணையதள சேவை அனைத்து செல்போன் நிறுவனங்களின் சேவை முடக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்தியாவில் இருந்தும், இந்தியாவிற்கு செல்லும் விமானங்களுக்கான பாக்கிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாத படி, வான்வழி பாதையை மூடுவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி 

இதுதொடர்பாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானின் இந்தியாவுக்கான வான்வெளியை முழுமையாக மூடவும், இந்தியா - ஆப்கானிஸ்தானுக்கான வான் எல்லையை மூடுவது மற்றும் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான சட்ட முறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மோடி துவக்கி வைத்ததை நாங்கள் முடித்து வைத்துள்ளோம் என  தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்தததை எதிர்த்து பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியதுடன் ரயில் மற்றும் பேருந்து சேவைகளை நிறுத்தியது. 

பாலாகோட்டில் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்கிய போதும் பாகிஸ்தான் தனது வான்வெளியை 138 நாட்கள் மூடி வைத்திருந்து, பின்னர் திறந்தது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, அரபு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல கூடுதல் நேரமும், அதிகப்படியாக எரிபொருளும் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com