
சீன ஊடகக் குழுமத்தின் தனிச்சிறப்பான நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் நடவடிக்கை, டிசம்பர் 9ஆம் நாள் பிரான்ஸின் லோவீரே மாளிகையில் நடைபெற்றது.
இதில் “சீன அரும் பொருட்கள் பேசினால்” என்ற ஆவணப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்ஸ் மக்களுக்கு சீன ஊடகக் குழுமத்தின் தலைசிறந்த நிகழ்ச்சிகளைப் பரிந்துரை செய்வது, சீனாவின் பாரம்பரிய வரலாற்று பண்பாட்டைப் பரவல் செய்வது, இரு நாட்டு பண்பாட்டுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவது ஆகியவை “சீன அரும் பொருட்கள் பேசினால்” என்ற ஆவணப்படத்தை அறிமுகப்படுத்துவதன் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரான்சுக்கான சீனத் தூதர் லு ஷா யே சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் நீண்டகால வரலாறு மற்றும் ஒளிமயமான பண்பாடு உண்டு. கீழை மற்றும் மேலை நாடுகளான சீனாவும் பிரான்சும் பல்வேறு பண்பாட்டுப் பரிமாற்றப் பேச்சுவார்த்தையின் மாதிரி நாடுகளாக மாறியுள்ளன என்று தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.