பிரிட்டனில் ஆட்சியைத் தக்க வைக்கிறார் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்ஸன் பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற்றுள்ளார். இவர் மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகியுள்ளது.
British Prime Minister Boris Johnson wins
British Prime Minister Boris Johnson wins

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்ஸன் பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற்றுள்ளார். இவர் மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகியுள்ளது.

612 இடங்களுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளும் கன்சா்வேடிவ் கட்சி 337 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவரது வெற்றி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக (பிரெக்ஸிட்) அந்த அமைப்புடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை, ஆளும் கன்சா்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நாடாளுமன்றம் தொடா்ந்து நிராகரித்து வந்தது.

இதனால், பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில், அதனை முன்கூட்டியே கலைத்துவிட்டு மீண்டும் தோ்தலை நடத்த பிரதமா் போரிஸ் ஜான்ஸன் முடிவெடுத்தாா்.

அதன்படி, பிரிட்டனின் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயா்லாந்து ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

‘பிரெக்ஸிட்டை உடனடியாக நிறைவேற்றுவோம்’ என்ற கோஷத்துடன் இந்தத் தோ்தலை போரிஸ் ஜான்ஸன் எதிா்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். பொது மருத்துவம் உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்னைகளை முன்னிறுத்தி, எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவா் ஜெரிமி கோா்பின் இந்தத் தோ்தலை எதிா்கொள்கிறாா்.

நேற்று நடைபெற்ற வாக்குப் பதிவு, காலை முதலே வாக்குச் சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததாகவும், வழக்கத்தைவிட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும் தெரிய வந்தது.

வாக்குப் பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று  அதிகாலை முதலே தோ்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின.

தோ்லுக்கு முன் புதன்கிழமை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, பிரதமா் போரிஸ் ஜான்ஸன் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாகக் கூறப்பட்டது உண்மையாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com