
டூயலே: அமெரிக்காவின் உட்டா பகுதியில், 10 ஆண்டுகளாக கணவரின் உடலை ஃப்ரீஸரில் வைத்திருந்த மனைவியைப் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 22ம் தேதி, ஓய்வு பெற்றவர்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்த ஜென்னி சௌரோன் மேத்தர்ஸ் என்ற 75 வயது மூதாட்டி மரணம் அடைந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டூயலே காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றினர்.
அப்போது வீட்டில் சோதனை செய்த போது, வீட்டினுள் இருந்த ஃப்ரீஸரில், அப்பெண்ணின் கணவர் மேத்தர்ஸின் உடல் பதப்படுத்தப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த உடல் குறைந்தது 11 ஆண்டுகளாக அதில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டுக்கு முன்பே அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மேத்தர்ஸின் உடல் ப்ரீஸரில் வைக்கப்பட்டிருந்ததையும் கண்டறிந்துள்ளனர்.
மேத்தர்ஸின் இறப்பினால், அவரது மனைவிக்கு எந்த பணவரவும் தடைப்பட்டு விடக் கூடாது அல்லது பாதுகாப்புக் குறைபாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.