இணையவாசிகள் கிண்டல் செய்ததால் உடல் எடை குறைத்த பிரபல பாப் பாடகர்

"ஷேப் ஆஃப் யூ" என்ற பாடலைப் பாடிய எட் ஷீரன் இசை ரசிகர்களின் ஆதர்சமானவர்.
இணையவாசிகள் கிண்டல் செய்ததால் உடல் எடை குறைத்த பிரபல பாப் பாடகர்

"ஷேப் ஆஃப் யூ" என்ற பாடலின் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற எட் ஷீரன் இசை ரசிகர்களின் ஆதர்சமானவர்.  அண்மையில் அவர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு தன் உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ளார். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி குறிப்பிடுகையில் உடல் பருமனானவர், என்றும் குண்டானவர் என்றும் கேலி செய்து வந்தனர் இணையவாசிகள்.  இதுதான் அவரது எடைக் குறைப்புக்கு காரணமாக அமைந்தது.

இது குறித்து எட் ஷீரன் கூறுகையில், 'இணையவாசிகள் சிலரின் கிண்டல்தான் உடல் எடையை குறைக்கச் செய்தது’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘நான் இத்தகைய கிண்டல்களால் ஒருபோதும் பாதிப்படைவதில்லை. எனக்கு அது ஒருபோதும் பெரிய பிரச்எனையாக இருந்ததில்லை. அவர்களிடம் உள்ள ஏதோ ஒரு குறையை இட்டு நிரப்ப சிலர் மற்றவர்களைக் குறை கூறுகின்றனர். அடுத்தவரை குறை சொல்லி சுகம் காணும் மனப்போக்கு இது. என்னை குண்டானவன் என்று சுட்டிக்காட்டும் பலரும் குண்டானவர்கள்தான் என்பது வேடிக்கையான விஷயம்" என்று அவர் கூறினார்.

எல் ஷீரனின் கருத்துக்கு அவரது மனைவி செர்ரி ஆதரவளித்தார். கடந்த முறை உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடைக் குறைப்புக்கான கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறையைத் தொடங்கினார் எல் ஷீரன்.  இது ஆகஸ்ட் மாதத்தில் முடிந்தது.

இது குறித்து அவர் விளக்கினார்: "நான் பப்புக்குச் செல்வேன், பிடித்த உணவு வகைகளை நன்றாகச் சாப்பிடுவேன், ஒருபோதும் உடற்பயிற்சி எல்லாம் செய்தது கிடையாது.  என் நண்பர்கள் என்னை இரண்டு டின்னர் டெடி என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு உணவுப் பிரியன் நான். மேலும் என்னைப் பார்க்க தினமும் யாராவது வருவார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் குடிப்பது என்பதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்தச் சுற்றுப்பயணத்தில், இதை எல்லாம் தவிர்த்து உடல் எடையைக் குறைக்க உண்மையான முயற்சி செய்தேன். தினமும் சைக்கிளிங் மற்றும் ஓட்டப் பயிற்சியில் இறங்கினேன்" என்றார் எட் ஷீரன்.

இசை விடியோக்களில் தான் இடம்பெறாததற்குக் காரணம் உடல் பருமன் என்று ஒப்புக்கொண்டார். "முதல் மூன்று அல்லது நான்கு விடியோக்களில் நான் கேமரா முன் தோன்றவில்லை. சிக்ஸ் பேக்குடன் காட்சி தரும் ஜஸ்டின் பீபருக்கும் எனக்கும் ஒரே வயதுதான். 'அட, நானும் இப்படி எல்லாம் இருக்க வேண்டுமா?' என்று பயந்தே தவிர்த்தேன்’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com