நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலி 

நைஜீரியாவில் ஞாயிறன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில், 30 பேர் பலியாகினர். 
நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலி 

அபுஜா: நைஜீரியாவில் ஞாயிறன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில், 30 பேர் பலியாகினர். 

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள கொண்டுகா பகுதியில் ஞாயிறன்று கால்பந்து போட்டி ஒன்றை ரசிகர்கள் சிலர் ஒன்றுகூடி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்குள் திடீரென்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நால்வர், தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு நைஜீரியாவின் போக்கோ ஹராம் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகள் நால்வரில் ஒருவர் பெண் ஆவார். அவர் கொண்டுவந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை என்பதால், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com