
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வந்த இளம் பத்திரிக்கையாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் முகமது பிலால் கான்(22) . இவர் தனது வலைப்பூவிலும், சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ -ஐ தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்திருக்கிறார்
முமகது பிலால் கானுக்கு ட்விட்டரில் 16,000 பாலோயர்களும், யூடியூப், பேஸ்புக்கில் 22,000 பாலோயர்களும் உள்ளனர்.
இந்நிலையில் திங்களன்று அடையாளம் தெரியாத நபரால் பிலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது நண்பருடன் வெளியே சென்றிருந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். அவருடைய நண்பருக்கும் தாக்குதலில் காயம் நேரிட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் போலீஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.