நரேந்திர மோடி, டொனால்டு டிரம்ப், ஷின்ஸோ அபே சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி, ஷின்ஸோ அபே மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். 
நரேந்திர மோடி, டொனால்டு டிரம்ப், ஷின்ஸோ அபே சந்திப்பு

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது. இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரை ஒசாகா நகரில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். 

அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:

தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு வாழ்த்துகள். இந்தியாவில் நரேந்திர மோடி முதன்முறையாக ஆட்சியமைத்த போது பல்வேறு எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அவை அனைத்தையும் இன்று சுமூகமாக ஒரே பாதையில் இணைத்து மோடி சிறப்பாக வழிநடத்துகிறார். இது அவரின் சிறப்பான வழிநடத்தும் திறனை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தியா, ஜப்பான் தலைவர்கள் தங்கள் நாடுகளில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்கள். நமது நாடுகள் சிறந்த நண்பர்களாக உள்ளன. இதுபோன்ற ஒரு நட்பு இதற்கு முன்பு கூட இருந்ததில்லை. இதை நான் உறுதியுடன் கூறுவேன். பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா என்றால் (நாடுகளின் முதல் எழுத்தை குறிக்கும் விதமாக) ஜெய் (வெற்றி) என்று அர்த்தம். இது என்றுமே வெற்றிக் கூட்டணி. ஈரான், 5ஜி தொழில்நுட்பம், நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் பாதுகாப்புத்துறை ஆகிய 4 முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளேன் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com