இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை: இலங்கையில் ஊரடங்கு உத்தரவு

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளதால் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளதால் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 250 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக பதற்றமான சூழல் நிலவி வந்தது. 

இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) இஸ்லாமியர்களின் கடைகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதனால், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.பி. ருவான் குணசேகரா தெரிவித்தார். 

அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இதுகுறித்து தெரிவிக்கையில்,

"பயங்கரவாதிகளை கைது செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் அயராது உழைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் உள்நாட்டில் வன்முறை ஏற்படுத்தி, அவர்களது விசாரணையில் கூடுதல் சுமையை கொடுக்கிறோம். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும். வீண் வதந்திகளை நம்பவேண்டாம்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com