
லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் ஞாயிறன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் லகுனாஸ் என்ற கிராமத்தின் தென்கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும், யூரிமேகுவாஸ் என்ற பெரிய நகரத்தின் வடகிழக்கே 158 கி.மீட்டர் தொலைவிலும், 114 கி.மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பெரு நாட்டு அரசாங்கத்தின் அவசரகால துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.