100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற நாய்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற நாய்

சீனாவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எதிர்பாராத விதமாக கலந்து கொண்ட ஒரு நாய் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
Published on


சீனாவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எதிர்பாராத விதமாக கலந்து கொண்ட ஒரு நாய் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிக்சியா ஹூய் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான யின்ச்சுவான் நகரத்தில் உள்ள வடக்கு மன்சூ பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு வெள்ளை நாய் வசித்து வருகிறது. அங்கு நடைபெற்ற ஓட்டப்பந்தய மைதானத்திற்குள் தற்செயலாக நுழைந்த அந்த நாய் மூன்று அல்லது நான்கு ரவுண்ட் ஓடி வந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த விடியோ சீனாவின் விடியோ தளமான வைபோவில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் ஜியாபாய் என்ற இந்த நாயின் வெற்றி மேடையில் பாராட்டைப் பெறவில்லை.

போட்டி நிறைவை அடுத்து பல்கலைக்கழக ஊழியர்கள் அந்த நாயைப் பிடித்து வளாகத்திற்கு வெளியே அனுப்பினர். விளையாட்டுப் போட்டியில் மட்டுமல்ல பல்கலைக்கழக மாணவர்கள் போல் கணிதம், இயற்பியல் மற்றும் சட்டம் வகுப்புகள் கலந்து கொண்ட இந்த நாய்க்கு டிப்ளோமா பட்டம் கொடுக்க வேண்டும் என சிலர் நகைச்சுவையாக பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com