கர்த்தார்பூர் வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு இரு நாட்கள் கட்டணம் கிடையாது: இம்ரான் கான்

பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
கர்த்தார்பூர் வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு இரு நாட்கள் கட்டணம் கிடையாது: இம்ரான் கான்

குருநானக் தேவின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு வசதியாக, பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள தா்பாா் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகா்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில், குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தைக் முன்னிட்டு கர்தார்பூர் வரும் சீக்கிய யாத்ரீகர்கள் மீது இரு நாட்களுக்கு எவ்வித கட்டணத் தொகையும் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது,

கர்தார்பூர் வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு நான் இரு சலுகைகளை அறிவித்தள்ளேன், அதன்படி, யாத்ரீகர்களிடம் ஏதேனும் ஒரு ஆவணச்சீட்டு இருந்தால் மட்டும் போதுமானது, கடவுச்சீட்டு தேவையில்லை.

அதுபோன்று யாத்திரை வரும் யாரும் 10 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் அவர்கள் யாரிடம் இருந்தும் யாத்திரையின் முதல் நாள் மற்றும் குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் எவ்வித கட்டணத் தொகையும் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com