
கொழும்பு துறைமுக நகரத் திட்டப்பணிக்கான நிலத் திட்டம் இலங்கை நகர வளர்ச்சி பணியகத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுத் தலைவர் சிறிசேனா செவ்வாய்கிழமை அதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் படி இலங்கையும் சீனாவும் ஒத்துழைத்து கட்டியமைக்கும் திட்டப்பணி இதுவாகும்.
கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மண் நிரப்பி அதில் இந்நகரம் கட்டியமைக்கப்படும் ஒரு புதிய நகரமாகும். தெற்காசியாவில் நிதி, சுற்றுலா, பொருள் புழக்கம், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் உயர தரமான நகரமாக இது திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுடன் இணைந்து கொழும்பு துறைமுக நகரத்தை தெற்காசியாவில் முதல் தர வணிக மையமாகக் கட்டியமைக்க விரும்புவதாக சிறிசேனா செவ்வாய்கிழமை நடைபெற்ற கையொப்பமிடும் விழாவில் தெரிவித்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.