ஜூலியன் அஸாஞ்சே சிறையில் இறக்கக்கூடும்: 60 மருத்துவர்கள் எச்சரிக்கை

ஜூலியன் அஸாஞ்சேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் அளிக்காவிட்டால் அவர் சிறையிலேயே இறக்கக்கூடும் என்று மருத்துவர்கள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.
ஜூலியன் அஸாஞ்சே சிறையில் இறக்கக்கூடும்: 60 மருத்துவர்கள் எச்சரிக்கை
Updated on
1 min read

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸாஞ்சே உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரிட்டன் அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளனர். ஜூலியன் அஸாஞ்சேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் அளிக்காவிட்டால் அவர் சிறையிலேயே இறக்கக்கூடும் என்று மருத்துவர்கள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.

இங்கிலாந்து உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் மற்றும் மறைமுக உள்துறை செயலர் டயான் அபோட் ஆகியோருக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தை விக்கிலீக்ஸ் திங்கள்கிழமை விநியோகித்துள்ளதாக ஹில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்வீடனுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஜாமீனைத் நிராகரித்த அஸாஞ்சே, தற்போது இங்கிலாந்தின் பெல்மார்ஷ் சிறையில் 50 வார சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். 

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அஸாஞ்சே, அவை அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com