இமயமலை உயரத்தை மறு அளவை செய்ய நேபாளம், சீனா முடிவு

கடந்த 1954-ஆம் ஆண்டு இமயமலையின் சிகரம் 8,848 அடி என இந்தியவால் அளவிடப்பட்டதே தற்போது வரை அதிகாரப்பூர்வ அளவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இமயமலை உயரத்தை மறு அளவை செய்ய நேபாளம், சீனா முடிவு
Updated on
1 min read

இமயமலை உயரத்தை மறு அளவை செய்ய நேபாளம் மற்றும் சீனா முடிவு செய்துள்ளது. இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங், நேபாளம் சென்ற நிலையில், இதுதொடர்பாக இரு நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், இமயமலை உலகப் பிரசித்தி பெற்றது. இதில் நேபாளத்தில் அமைந்துள்ள சகர்மதா சிகரமும், சீனாவில் அமைந்துள்ள ஸூமுலங்மா சிகரமும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பறைசாற்றுவதாகும். எனவே, தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இமயமலையை பாதுகாக்கும் விதமாக நேபாளம் மற்றும் சீனா இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. 

அதன்படி, சகர்மதா மற்றும் ஸூமுலங்மா ஆகிய சிகரங்களில் அறிவியல் ரீதியிலான தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நேபாளம், சீனா இடையிலான இமயமலைப் பரப்பளவின் எல்லைப் பகுதி சுருங்கியுள்ளது. எனவே, நேபாள அரசு சார்பில் இமயமலையின் சிகரத்தை அளவிட ஒரு குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 1954-ஆம் ஆண்டு இமயமலையின் சிகரம் 8,848 அடி என இந்தியவால் அளவிடப்பட்டதே தற்போது வரை அதிகாரப்பூர்வ அளவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நில அதிர்வுக்குப் பின் இமயமலையின் அளவு குறைந்துவிட்டதாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேபாளம் மற்றும் சீனா இணைந்து நடத்தும் இந்த மறு அளவை முடிவின் அடிப்படையில் இமயமலை சிகரத்தின் அளவு அடுத்த ஆண்டுக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com