பட்ஜெட் நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்!

பட்ஜெட் நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் எதிர்வரும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்!
Published on
Updated on
1 min read

பட்ஜெட் நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் எதிர்வரும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண நெருக்கடி காரணமாக மூடப்படுவதாக அந்த அமைப்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு வழக்கமான ஐ.நா. வரவு செலவுத் திட்டத்தில் உங்கள் நாடு இன்னும் பங்களிப்பு செய்துள்ளதா? எனவும் அதில் கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பகிர்ந்துள்ள ஒரு ஆவணத்தில், 131 உறுப்பு நாடுகள் தங்களது வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்தியுள்ளன. மொத்தத்தில், 34 உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை ஐ.நா.வின் நிதி ஒழுங்குமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள 30 நாள் காலத்திற்குள் முழுமையாக செலுத்தியுள்ளனர். 

அக்டோபர் 11-ஆம் தேதி, இந்தியாவின் தூதரும், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியுமான சையத் அக்பருதீன், ஐ.நா.வுக்கு தனது நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்திய 35 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறியிருந்தார். 

கனடா, சிங்கப்பூர், பூட்டான், பின்லாந்து, நியூசிலாந்து மற்றும் நோர்வே ஆகியவை சரியான நேரத்தில் செலுத்த வேண்டிய பிற நாடுகளில் அடங்கும். ஐ.நாவில் மொத்தம் 193 உறுப்பினர்கள் உள்ளனர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் இயக்க வரவு செலவுத் திட்டம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பணத்தை தவிர்த்து 5.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அருகில் உள்ளது. 

இதற்கிடையில், இந்த ஆண்டு இந்தியா 23,253,808 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட சிரியா 30 நாள் உரிய காலத்தின் முடிவில் அமைப்புக்கு தனது நிலுவைத் தொகையை செலுத்திய கடைசி நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஐ.நா. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிக மோசமான பண நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, அடுத்த மாதம் அதன் அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போகலாம் என்று பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறினார். இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஐக்கிய நாடுகள் சபை எதிர்கொள்ளும் மோசமான பண நெருக்கடி குறித்து அவர் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக குட்டெரெஸ் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com