
இஸ்லாமாபாத்: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானம் பாக்., வான்வெளியில் பறப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக செப்.9 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்து செல்லவுள்ளார் . இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வான் பிரதேசம் வழியாக பயணிப்பதே எளிதான வழியாக இருக்கும்.
ஆனால் தற்போது காஷ்மீர் நிலவரத்தைத் தொடர்ந்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் விமானம் பாக்.,வான்வெளியில் பறப்பதற்கு, அந்நாட்டு அரசிடம் இந்தியா சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அந்த விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கேட்ட நிலையில் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளதாக பாக். அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்துள்ளார் என்று, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.