பிரெக்ஸிட் விவகாரம்: ஐரோப்பிய யூனியன் தலைவரை சந்திக்கிறார் போரிஸ் ஜான்ஸன்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்க்கரை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் வரும் 16-ஆம் தேதி சந்திக்கவிருக்கிறார்.
பிரெக்ஸிட் விவகாரம்: ஐரோப்பிய யூனியன் தலைவரை சந்திக்கிறார் போரிஸ் ஜான்ஸன்


பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்க்கரை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் வரும் 16-ஆம் தேதி சந்திக்கவிருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்க்கரை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் வரும் 16-ஆம் தேதி சந்திக்கவிருக்கிறார்.
பிரெக்ஸிட் விவகாரம் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை பிரதமர் அலுவலக அதிகாரிகள் வெளியிடவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐரோப்பிய யூனியன் செய்தித் தொடர்பாளர் நடாஷா பெர்டாட் கூறுகையில், பிரெக்ஸிட் தொடர்பான ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்து பிரிட்டன் பிரதமருடன், ஐரோப்பிய யூனியன் தலைவர் விவாதிப்பார் என்று கூறினார்.
பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்து பகுதிக்கும், ஐரோப்பிய யூனியனின் அங்கமாகத் திகழும் அயர்லாந்து நாட்டுக்கும் இடையே, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் தொடர வேண்டிய வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பாக, இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் பிரிட்டனுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்காததால், இறுதித் தேதியான அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குப் பிறகு, ஒப்பந்தம் ஏதுமில்லாமலேயே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியேறினால் பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படும் சூழலில், ஐரோப்பிய யூனியன் தலைவரை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com