நிகழாண்டில் இதுவரை சர்வதேச அளவில் வெளிநாடுகளில் குடியேறியவர்களில் 1.75 கோடி பேர் இந்தியர்கள் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மக்கள் தொகை பிரிவு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டில் இதுவரை வெளிநாடுகளில் குடியேறி வாழ்ந்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 1.75 கோடி பேர்.
இதற்கு அடுத்த இடத்தில் மெக்ஸிகோவில் இருந்து குடியேறியவர்கள் (1.18 கோடி பேர்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சீனர்கள் 1.07 கோடி பேர், ரஷியர்கள் 1.05 கோடி பேர் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் சிரியாவிலிருந்து 82 லட்சம் பேர், வங்கதேசம் (78 லட்சம்), பாகிஸ்தான் (63 லட்சம் பேர்), உக்ரைன் (59 லட்சம் பேர்), பிலிப்பின்ஸ் (54 லட்சம் பேர்), ஆப்கானிஸ்தானிலிருந்து 51 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.
வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இந்த ஆண்டில் இதுவரை 51 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை குறைவாகும். வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில் குடியேறி வருகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

