
பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் வியாழக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது,
பயங்கரவாதத்தால் இந்தியா பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. எனவே அதன் வலி எத்தனை கொடியது என்பது எங்களுக்கு நன்கு தெரியும். ஆகையால் பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமே இந்தியாவின் முதல் இலக்காகும். உலகளவில் அச்சுறத்தலை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் இந்தியாவின் செயல்பாடுகள் அனைத்தும் அனைவரும் அறிந்ததுதான். ஏனென்றால் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க பிரதமர் மோடி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.