சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: ஒருவர் சாவு

வெள்ளை மாளிகை அருகே நடைபெற்றுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2019, 5:09 am

DIN

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சமீபகாலமாக அங்கு தொடரும் இந்த திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் தொடர்ச்சியாக தற்போது மர்ம நபரால் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளை மாளிகையின் மிக அருகாமையில் அமைந்துள்ள கொலம்பியா ஹைட்ஸ் எனுமிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியின் அருகில் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.