மன அழுத்தத்தைக் குறைக்க 'லைக்ஸ்'களை மறைக்க திட்டம்? பேஸ்புக்கின் சோதனை முயற்சி

பேஸ்புக் லைக்குகளை மறைப்பதற்கான ஒரு சோதனை முயற்சியை பேஸ்புக் நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.
பேஸ்புக்
பேஸ்புக்

சான் பிரான்சிஸ்கோ: பேஸ்புக் லைக்குகளை மறைப்பதற்கான ஒரு சோதனை முயற்சியை பேஸ்புக் நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.

இதன் மூலம் எதிர்வினைகள், ரியாக்சன் மற்றும் லைக்ஸ்களின் எண்ணிக்கை ஒரு இடுகையை பதிவிட்டருக்கு மட்டுமே தெரியும்.

இந்த சோதனை முதலில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என்று சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் நேற்று உறுதிப்படுத்தியது.

"பேஸ்புக் முழுவதும் எதிர்வினை மற்றும் வீடியோ பார்வை எண்ணிக்கைகள் அந்த பதிவினை செய்தவருக்கு மட்டுமே தெரியும் வகையில் ஒரு வரையறுக்கப்பட்ட சோதனையை நாங்கள் நடத்தி வருகிறோம்" என்று ஒரு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"இந்த மாற்றம் மக்களின் அனுபவங்களை மேம்படுத்துமா என்பதைப் புரிந்துகொள்ள கருத்துக்களை சேகரிக்கும்" என்று பேஸ்புக் மேலும் கூறியது.

லைக்ஸ்களை மற்றவர்கள் பார்க்காமல் அகற்றுவதற்கான காரணம் பயனர்களிடையே சமூக அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. ஒருவர் அதிக லைக்ஸ் வாங்குவது, நமக்கு லைக்ஸ் விழுவதில்லையே என்ற ஏக்கத்தைப் போக்குவதையும் இது நோக்கமாக வைத்துள்ளது.

ஏற்கனவே இன்ஸ்டாகிராமதில் இதுபோன்ற ஒரு வாய்ப்பு உள்ளது. கனடாவில் உள்ள பயனர்களுக்காக முதலில் இந்த சோதனை முயற்சி கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது, இப்போது அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் தங்கள் இன்ஸ்டாகிராம் இடுகைகளில் 'லைக்' எண்ணிக்கையை மறைக்க முடியும்.

பேஸ்புக்கில், மக்கள் தங்களை வசதியாக வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்றும், லைக்ஸ்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதை விட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியது. அந்த வகையில் இது முயற்சி சோதனை செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com