புதிய இரத்த பரிசோதனையில் 20 வகையான புற்றுநோய்கள் கண்டறியப்படலாம்!

புதிய இரத்த பரிசோதனையில் 20 வகையான புற்றுநோய்கள் கண்டறியப்படலாம்!

ஒரு புதிய இரத்த பரிசோதனை மூலம் பல வகையான புற்றுநோய்களை துல்லியமாகக் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நியூயார்க்: ஒரு புதிய இரத்த பரிசோதனை மூலம் பல வகையான புற்றுநோய்களை துல்லியமாகக் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ரத்தப் பரிசோதனையில் 20க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்களைக் கண்டறிந்து உறுதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரி தொழில்நுட்ப நிறுவனமான கிரெயில் இன்க் உருவாக்கிய இந்த பரிசோதனையில், மரபணுக்கள் செயலில் உள்ளதா அல்லது செயலற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் சிறிய வேதியியல் முறையில் மரபணுவை ஆய்வு செய்யும் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 3,600 இரத்த மாதிரிகள் இந்த பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சில புற்றுநோயாளிகளிடமிருந்தும், புற்றுநோய் கண்டறியப்படாதவர்களிடமிருந்தும் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளைக் கொண்டு சோதனை செய்யப்பட்டது.

சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது, புற்றுநோயாளியின் ரத்த மாதிரிகளிலிருந்து புற்றுநோய் சமிக்ஞையை எடுத்தது மற்றும் சரியாக புற்றுநோய் தொடங்கிய இடத்திலிருந்து (தோற்றத்தின் திசு) அடையாளம் காணப்பட்டது" என்று சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, பாஸ்டனை மையமாகக் கொண்டு இயங்கும் டானா-ஃபார்பர் புற்றுநோய் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த புதிய சோதனையின்படி, புற்றுநோய் செல்கள் இறக்கும் போது அது இரத்த ஓட்டத்தில் கலக்கும். அதை அடிப்படையாக வைத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

பொதுவான புற்றுநோய்களில் ஒரு குறைந்தபட்ச சதவீதத்தை கூட ஆரம்பத்தில் கண்டறிவது என்பது, பல நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பயனுள்ள சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com