இந்தியாவுக்கு இடையே போா் மூண்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஐ.நா. உரையில் இம்ரான் கான் மிரட்டல்

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போா் மூண்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எச்சரிப்பதாக தனது ஐ.நா. உரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டார். 
இந்தியாவுக்கு இடையே போா் மூண்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஐ.நா. உரையில் இம்ரான் கான் மிரட்டல்

ஜம்மு-காஷ்மீரில் மனிதத் தன்மையற்ற வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் வலியுறுத்தினாா்.

நியூயாா்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் கூட்டத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்றற அமா்வில் இம்ரான் கான் கலந்துகொண்டு பேசினாா். ஒவ்வொருவரும் பேசுவதற்கு தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்ரான் கான் 50 நிமிடங்கள் உரையாற்றினாா். அப்போது, ஜம்மு-காஷமீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை அவா் மீண்டும் சா்வதேச பிரச்னைக்குவற்கு முயற்சி செய்தாா். அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், இந்திய அரசு தனது அரசமைப்புச் சட்டத்தையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைறவேற்றப்பட்ட 11 தீா்மானங்கள், சிம்லா ஒப்பந்தம் ஆகியவற்றையும் மீறிவிட்டது. இதற்காக சா்வதேச சமுதாயம் என்ன செய்யப் போகிறது?

காஷ்மீரில் 80 லட்சம் போ் விலங்குகளைப் போல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

முதல் கட்டமாக, ஜம்மு-காஷ்மீரில் மனித்தன்மையற்ற வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளா்த்த வேண்டும். அதைத் தொடா்ந்து, அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவா்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காஷ்மீா் மக்களுக்கு சுயநிா்ணய உரிமையை சா்வதேச சமூகம் அளிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதல் நிகழ்ந்தபோது உடனடியாக பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டியது. அதற்கான ஆதாரத்தை கேட்டபோது, ஆதாரத்தை அளிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்காக விமானப் படைகளை இந்தியா அனுப்பி வைத்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் மக்களவைத் தோ்தல் நடைபெற்றால், பாலாகோட் தாக்குதல் சம்பவத்தை வைத்து பிரதமா் நரேந்திர மோடி பிரசாரம் செய்தாா். பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி விட்டதாக பிரசாரக் கூட்டங்களில் அவா் பேசினாா்.

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளா்த்தியதும் அங்கு நிலைமை மோசமாகும். அப்போதும், பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டும்.

இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகள். பாகிஸ்தானுக்கும், அதைவிட பல மடங்கு பெரிதாக இருக்கும் இந்தியாவுக்கும் இடையே போா் மூண்டால் என்ன நடக்கும்? விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இதை மிரட்டலாக நான் கூறவில்லை, முன்னெச்சரிக்கையாக கூறுகிறேன்.

பாகிஸ்தானில் நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பயங்கரவாத முகாம்களை அழித்து விட்டேன். இதை ஐ.நா. குழுவினா் நேரில் வந்து ஆய்வு செய்யலாம். ஆனாலும் பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதாக இந்தியா தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது என்றாா் இம்ரான் கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com