
அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெúஸாஸ் தொலைபேசியை சவூதி அரேபியா அதிகாரிகள் ஒட்டுக் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமேஸான் நிறுவனர் ஜெப் பெúஸாஸýக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவூதி பத்திரிகையாளர் ஜமாஸ் கஷோகி, சவூதி அரேபியா அரசு குறித்து விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். இந்த நிலையில், கஷோகி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றிருந்தபோது மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டார். இதையடுத்து, அமெரிக்காவுக்கும், சவூதி அரசுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவியது.
இதனிடையே, பெúஸாஸின் தொலைபேசி அழைப்புகள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், சவூதி அதிகாரிகளால் ஒட்டுக் கேட்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அது குறித்த விசாரணைக்கு பெúஸாஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைக்கு கெவின் டி பெக்கர் & அசோசியேட்ஸýக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையின்போது பெúஸாஸின் தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து கொள்ள சவூதி அதிகாரிகள் அவரது தொலைபேசியை ஒட்டுக் கேட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கெவின் டி பெக்கர் டெய்லி பீஸ்ட் வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
பெúஸாஸின் தனிப்பட்ட தகவல்களை பெறுவதற்காக சவூதி அதிகாரிகள் அவரது தொலைபேசியை இடைமறித்து கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. மிகவும் ரகசியம் காக்கப்படும் தகவல்களை சவூதி அதிகாரிகள் ஒட்டுக் கேட்டதை எங்களது விசாரணை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பலர் உறுதி செய்துள்ளனர் என்று அந்த கட்டுரையில் டி பெக்கர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் சவூதி அரேபிய அரசை குற்றம் சாட்டும் வகையில் பெக்கர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.