
தாய்லாந்தில் நாய் ஒன்று, கடல் பகுதியில் 220 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து வளைகுடா பகுதியில் எண்ணெய் துரப்பண பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், கடலில் நாய் ஒன்று அலைகளுக்கு இடையே தத்தளித்தபடி வந்ததை கடந்த வெள்ளிக்கிழமை கண்டனர். உடனடியாக அந்த நாடைய பத்திரமாக அவர்கள் மீட்டனர்.
எண்ணெய் துரப்பண பணி நடைபெற்ற இடம், கரையில் இருந்து 220 கிலோ மீட்டர் தூர தொலைவில் கடலில் அமைந்துள்ளது. அப்படியிருக்கையில், நாய் அங்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. மீன்பிடி படகில் இருந்து அந்த நாய் தவறி கடலில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி நாய் கடலுக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அந்த நாய்க்கு, பூன் ராட் (உயிர் பிழைத்தவர்) என அவர்கள் பெயரிட்டனர். இந்த நாய், சோங்க்லா மாகாணத்துக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு, விலங்கின ஆர்வலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...