காஷ்மீர் பற்றிய பதிவு: பாகிஸ்தான் அதிபருக்கு ட்விட்டர் நோட்டீஸ் 

காஷ்மீர் பற்றிய பதிவிற்காக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஷ்மீர் பற்றிய பதிவு: பாகிஸ்தான் அதிபருக்கு ட்விட்டர் நோட்டீஸ் 

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பற்றிய பதிவிற்காக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி சனிக்கிழமையன்று தனது ட்விட்டர் கணக்கில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று காஷ்மீர் நிலவரம் தொடர்பாக வெளியிட்டிருந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதையொட்டி ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான தனது  கருத்துகளையும் பகிர்ந்திருந்தார்  

இந்நிலையில் காஷ்மீர் பற்றிய அவரது பதிவிற்காக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில்  அல்வியின் பதிவு தொடர்பாக தங்களுக்கு புகார் வந்துள்ளதாக ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் தங்கள் நிறுவன விதிமுறைகளின்படி அதில் எதுவும் விதிமீறல்கள்  இல்லை என்றும், உடனடியாக அல்வி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்த தகவலை பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி  செய்தியாளர்களிடம் பகிர்ந்துடன், ட்விட்டர் நிறுவனம் மற்றும் இந்தியாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.  

ட்விட்டர் பதிவிற்காக இதேபோல் நோட்டீஸ் தனக்கும் வந்துள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் முராத் சயீதும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பற்றிய பதிவுகளுக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200-க்கும்மேற்பட்ட கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com