விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி; புயல் எச்சரிக்கையை மீறியதுதான் காரணமா?

அமெரிக்காவில் தெற்கு டகோதா பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். 
விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி; புயல் எச்சரிக்கையை மீறியதுதான் காரணமா?

அமெரிக்காவில் தெற்கு டகோதா பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள், விமானி உள்பட 9 பேர் பலியாகினர். 

அமெரிக்காவில் இடாஹோ நகரில் இருந்து புறப்பட்ட பிலடஸ் பிசி -12(Pilatus PC-12) என்ற விமானம் தெற்கு டகோதா பகுதியில் கீழே விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். வலுவான காற்று மற்றும் பனி சூழந்த நிலையிலும் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்றது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு விமானியும் அடங்குவர். மேலும், 3 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் விழா ஒன்றிற்காக விமானத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் எச்சரிக்கையை மீறி சென்றதால் விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விசாரணையும் தொடர்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com