ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாய் கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கும் அமெரிக்க நிறுவனம்!

மேரிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாயை போனஸாக வழங்கியுள்ளார். 
ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாய் கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கும் அமெரிக்க நிறுவனம்!

மேரிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாயை போனஸாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் செயின்ட் ஜான் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எட்வர்ட் செயின்ட் ஜான்(81) தனது பணியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸை அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை நிறுவனத்தின் சாதனைகள் குறித்த விழா நடைபெற்றது.

இதில், நிறுவனத்தின் உரிமையாளர், தனது 200 ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக பத்து மில்லியன் பவுண்டுகள் (70 கோடி ரூபாய்) அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் சில ஊழியர்களுக்கும் போனஸை(ரூ.35 லட்சம்) வழங்கினார். தொடர்ந்து மற்ற ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. எங்களது வாழ்க்கையின் மாற்றத்திற்கு இந்த நிறுவனம் உதவும் என்று ஊழியர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ஜான் பேசும்போது, 'எங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும், அவர்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதைக் காட்ட இதை விட ஒரு சிறந்த வழி எனக்கு தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் ஒன்றுமே இல்லை' என்று தெரிவித்தார். 

நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் முதலீட்டு மதிப்பு 3.5 பில்லியன் டாலர் (2.6 பில்லியன் பவுண்டுகள்) ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com