பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்

மலேசிய மன்னர் சுல்தான் முகமது (49), தனது பட்டத்தைத் துறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்

மலேசிய மன்னர் சுல்தான் முகமது (49), தனது பட்டத்தைத் துறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 அந்த நாடு 1957-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, மன்னரொருவர் பட்டம் துறப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த 2016-ஆம் ஆண்டின் இறுதியில் மன்னர் பட்டத்தை ஏற்றதிலிருந்தே மருத்துவச் சிகிச்சை பெறுவதாகக் கூறி அவர் அரசப் பணிகளை மேற்கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார்.
 அவர் முன்னாள் ரஷிய பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும், விரைவில் தனது மன்னர்பட்டத்தை அவர் துறப்பார் என்றும் இணையதளங்களில் தகவல்கள் வெளியாகின.
 இந்த நிலையில், மன்னர் சுல்தான் ஐந்தாம் முகமது தனது பட்டத்தைத் துறந்ததாக மலேசிய அரசவை அதிகாரப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்து.
 எனினும், அவர் மன்னர் பட்டத்தைத் துறந்ததற்கான காரணம் எதுவும் அரசவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com