சுடச்சுட

  

  சர்வதேச தடைகள்: வடகொரியா மீது அமெரிக்கா திடீர் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 14th June 2019 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சர்வதேச தடைகளை வடகொரியா மீறுவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா உள்ளிட்ட 26 நாடுகள் திடீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன.
  அணுகுண்டு சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தன. அப்போது, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களை ஆண்டுக்கு 5 லட்சம் பேரல்கள் மட்டுமே இறக்குமதி செய்யவேண்டும் என்று வடகொரியாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 
  இந்நிலையில், சர்வதேச தடைகளை மீறி, ஆண்டுக்கு 5 லட்சம் பேரல்களுக்கும் கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களை வடகொரியா இறக்குமதி செய்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட 26 நாடுகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள வடகொரியா மீதான பொருளாதார தடைகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் குழுவிடம் மேற்கண்ட 26 நாடுகளும் தங்களது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. அத்துடன், வடகொரியாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் விநியோகம் கிடைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்  அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
  முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், வடகொரியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இதே கோரிக்கையை முன்வைத்தன. ஆனால் அக்கோரிக்கைக்கு ரஷியாவும்,  சீனாவும் முட்டுக்கட்டை போட்டன.
  வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருள்களை ரஷியாவும், சீனாவும்தான் அதிக அளவில் விநியோகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai