
சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சீனாவின் பெய்ஜிங் நகருக்கு அமெரிக்கப் பிரதிநிதிகள் கடந்த வியாழக்கிழமை சென்றனர். வர்த்தகம் தொடர்பாக வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இதர நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடுகையில், அமெரிக்காதான் முன்னணியில் உள்ளது. உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கா முன்னகர்த்தி செல்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமையாக உள்ளது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...