சீனாவோடு இணைந்து முத்தரப்பு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்கள் முன்னிலையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், பெரும்பாலும் வெனிசூலா உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு தொடர்பான விசாரணை குறித்தும் புதினுடன் டிரம்ப் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.