
தடை செய்யப்பட்ட ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக, வக்கார்-உல்-ஹஸன்(35) என்ற பாகிஸ்தான்-அமெரிக்கரை, எஃப்பிஐ அமைப்பு கைது செய்தது.
பாகிஸ்தானின் உத்தம் குஜராத் பகுதியில் கடந்த 1984-ஆம் ஆண்டு பிறந்த வக்கார்-உல்-ஹஸன், தனது 15-ஆவது வயதில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் வசித்த அவர், அமெரிக்க குடியுரிமை பெற்றாலும், பாகிஸ்தான் குடியுரிமையையும் தக்க வைத்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு துறையான எஃப்பிஐக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவரிடம் எஃப்பிஐ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஐ.எஸ் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக ஹஸன் ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.