சீனச் சந்தையின் ஈர்ப்புகள்!

2 ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி செழுமையாக நடைபெற்று வருகின்றது.
சீனச் சந்தையின் ஈர்ப்புகள்!


2 ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி செழுமையாக நடைபெற்று வருகின்றது. உலகத் தொழில் நிறுவனங்கள் இம்மேடையைப் பயன்படுத்தி, தனது உற்பத்திப் பொருட்களைச் சீன சந்தையில் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றன.

உலகின் மிகப் பெரிய சந்தையான சீனாவில், தங்களின் கிளை நிறுவனங்களை அமைக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் தெரிவித்துள்ளார். மிக பெரிய அளவிலான தேவை, சீன சந்தையின் முதல் ஈர்ப்பாகும். தற்போது, உலகின் 120க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் மிக பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கின்றது.

போதுமளவிலான, தரமான வன்பொருட்களைக் கொண்டிருப்பது, சீனச் சந்தையின் ஈர்ப்பாகும். கடந்த சில பத்து ஆண்டு கால வளர்ச்சியின் மூலம், முழுமையான அடிப்படை வசதிகளையும் வலிமைமிக்க சரக்குப் போக்குவரத்து வலைபின்னலையும் சீனா உருவாக்கியுள்ளது. உலகின் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பொருட்களும் சேவைகளும், வெற்றிகரமாக சீனாவில் நுழைவதன் வழி, தங்களின் செலவைக் குறைக்க முடியும்.

16 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 60 வாகனத்தொழில் நிறுவனங்கள், 140 ரக அழகான வாகனங்களைக் காட்சிக்கு வைத்துள்ளன. இந்த வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 70 புதிய தொழில் நுட்பங்கள் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. 

சரியான வணிகச் சூழல், சீன சந்தையின் ஈர்ப்பாகும். உலக வங்கி வெளியிட்ட 2020ஆம் ஆண்டு வணிகச் சூழல் தரவரிசை அறிக்கையில், சீனா, 15 இடங்கள் உயர்ந்துள்ளது. சீனாவின் தொடர்ந்த திறப்பு மற்றும் வர்த்தக வசதிமயமாக்கத்தை உயர்த்துவதற்கான பாராட்டு இதுவாகும்.

அறிவியல் புதுப்பிப்பின் மூலம், உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்குச் சீனா பாடுபட்டு வருகின்றது. இது சீன சந்தையின் ஈர்ப்பாகும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com