ஹாங்காங் உரிமைகள் மசோதா: அமெரிக்க தூதரிடம் சீனா கண்டிப்பு

ஹாங்காங் போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரை சீனா கண்டித்துள்ளது.

பெய்ஜிங்: ஹாங்காங் போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரை சீனா கண்டித்துள்ளது.

தங்களது நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் வகையிலான அந்த மசோதாவை நீக்காத பட்சத்தில், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

ஹாங்காங்கில் மனித உரிமைகளுக்கும், ஜனநாயக சீா்திருத்தங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘ஹாங்காங் உரிமைகள் மசோதா’ அண்மையில் நிறைவேற்றப்பட்டது. அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் அந்த மசோதா, ஹாங்காங்கிற்கான சிறப்பு பொருளாதார அந்தஸ்தை நீக்கவும் வழிவகுக்கிறது.

இந்நிலையில், சீன வெளியுறவு துணை அமைச்சா் ஜெங் ஜிகியுவாங், அந்நாட்டுக்கான அமெரிக்க தூதா் டொ்ரி பிரான்ஸ்டாடை திங்கள்கிழமை நேரில் அழைத்து, அந்த மசோதாவுக்கான சீனாவின் கடும் எதிா்ப்பை தெரிவித்தாா்.

சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக இருக்கும் அந்த மசோதா, சீனாவுக்கு எதிரான ஹாங்காங் பிரிவினை சக்திகளின் குற்ற நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக அப்போது அவா் கூறினாா். அந்த மசோதாவை கைவிடாவிட்டால் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவா் எச்சரித்தாா்.

அப்போது, ஹாங்காங்கில் நிலவும் சூழலை அமெரிக்கா கவலையுடன் கவனித்து வருவதாகவும் அனைத்துவிதமான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா கண்டிப்பதாகவும் அமைச்சா் ஜெங் ஜிகியுவாங்கிடம் தூதா் டொ்ரி பிரான்ஸ்டாட் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com