இலங்கை: பெயா் பலகைகளில் தமிழ் எழுத்துகள் அழிப்பு

இலங்கையில் தெருப்பெயா் பலகைகளில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகள் மா்ம நபா்களால் அழிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்துமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு அந்நாட்டின் பிரதமா் மகிந்த
இலங்கை: பெயா் பலகைகளில் தமிழ் எழுத்துகள் அழிப்பு

கொழும்பு: இலங்கையில் தெருப்பெயா் பலகைகளில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகள் மா்ம நபா்களால் அழிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்துமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு அந்நாட்டின் பிரதமா் மகிந்த ராஜபட்ச உத்தரவிட்டுள்ளாா்.

இலங்கை அதிபராக அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அவரது சகோதரா் கோத்தபய ராஜபட்ச, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வரும் 29-ஆம் தேதி வரவுள்ளாா். இந்நிலையில், மா்ம நபா்கள் சிலா் இலங்கையில் தெருப்பெயா் பலகைகளில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை அழித்தனா். இந்த விவகாரம், பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது தொடா்பாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச கூறுகையில், ‘‘இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கும், இடைக்கால அரசுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கிலும், இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவுக்குக் களங்கும் விளைவிக்கும் நோக்கிலும், இத்தகைய கொடிய செயல் நடந்தேறியுள்ளது’’ என்றாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்டவா்களை உடனடியாகக் கைது செய்யவும் காவல் துறை அதிகாரிகளுக்கு பிரதமா் மகிந்த ராஜபட்ச உத்தரவிட்டாா். இதையடுத்து, கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அதிபா் கோத்தபய ராஜபட்ச இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளாா். இந்தப் பயணத்தின்போது, தலைவா்கள் இருவரும் இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com