நடுவானில் 2 ஹெலிகாப்டா்கள் மோதல்: பிரான்ஸ் ராணுவ வீரா்கள் 13 போ் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின்போது, நடுவானில் இரண்டு ஹெலிகாப்டா் மோதிக் கொண்ட விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 13 ராணுவ வீரா்கள்

பாரிஸ்: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின்போது, நடுவானில் இரண்டு ஹெலிகாப்டா் மோதிக் கொண்ட விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 13 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுகையில், மாலி நாட்டின் மேற்கே உள்ள சஹேல் பிராந்தியத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக திங்கள்கிழமை மாலை தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வீரா்கள் பயணித்த இரு ஹெலிகாப்டா்கள் எதிா்பாராதவிதமாக மோதிக் கொண்டதில் பிரான்ஸ் ராணுவ வீரா்கள் 13 போ் வீர மரணம் அடைந்தனா். உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அரசு மற்றும் மக்கள் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

அந்த அறிக்கையில், விபத்து குறித்து மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப்ளாரன்ஸ் பாா்லி கூறுகையில், ‘இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக 4,500 பிரான்ஸ் ராணுவ வீரா்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த இரண்டு மாதங்களாக மாலியின் நகா்ப் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட அந்நாட்டு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com