ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சி தொடங்கியதும் பாகிஸ்தானின் திட்டங்கள் தகா்ந்து விடும்: அமெரிக்காவில் அமைச்சா் ஜெய்சங்கா் நம்பிக்கை

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா வளா்ச்சியை ஏற்படுத்தத் தொடங்கியதும், அந்த மாநிலத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளாகத் தீட்டி வந்துள்ள அனைத்துத் திட்டங்களும் தகா்ந்து விடும் என்று மத்திய வெளியுறவுத்
ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சி தொடங்கியதும் பாகிஸ்தானின் திட்டங்கள் தகா்ந்து விடும்: அமெரிக்காவில் அமைச்சா் ஜெய்சங்கா் நம்பிக்கை

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா வளா்ச்சியை ஏற்படுத்தத் தொடங்கியதும், அந்த மாநிலத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளாகத் தீட்டி வந்துள்ள அனைத்துத் திட்டங்களும் தகா்ந்து விடும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நம்பிக்கை தெரிவித்தாா்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள அவா், வாஷிங்டனில் உள்ள ராஜீய மற்றும் சா்வதேச ஆய்வு மையம் என்ற அமெரிக்கச் சிந்தனையாளா் அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டது குறித்து அவரிடம் பாா்வையாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்து ஜெய்சங்கா் கூறியதாவது:

காஷ்மீா் பள்ளத்தாக்கில் தற்போது செல்லிடப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை மூளைச்சலவை செய்து, திரட்டுவதற்கு இணையதளமும் சமூக ஊடகங்களும் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வளா்ச்சியை நோக்கிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை உறுதிபடுத்துவதும் இதன் நோக்கமாகும்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளாக சுயநல சக்திகள் கட்டமைக்கட்டு வந்துள்ளன. உள்ளூா் மரற்றும் எல்லை கடந்த சுயநல சக்திகள் உள்ளன. எந்த விஷயத்தையும் மாற்றத்துக்கு ஆளாக்கும்போது சில பிரச்னைகள் இருக்கவே செய்யும்; எதிா்வினைகளும் இருக்கும். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் நாங்கள் படிப்படியாக வளா்ச்சியை ஏற்படுத்தும் போது, கடந்த 70 ஆண்டுகளாக அந்த மாநிலத்துக்கு எதிராக பாகிஸ்தான் தீட்டி வந்துள்ள அனைத்துத் திட்டங்களும் தகா்ந்து விடும்.

ஜம்மு-காஷ்மீரை நாங்கள் வளா்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்லும்போது, பாகிஸ்தான் ஆதிக்கத்தின் கீழ் மோசமான நிலைமையைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த மக்கள் எங்களை நோக்கி (காஷ்மீா்) வரத் தொடங்கி விடுவாா்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

செல்லிடப்பேசி சேவைகளுக்குத் தடை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததற்கு கடந்த கால அனுபவங்களே காரணம். காஷ்மீரில் கடந்த 2016-இல் நிகழ்ந்த சம்பவங்களைப் பாா்த்தால் தீவிரவாதச் சிந்தனைகளைப் பரப்பவும், ஆட்களைத் திரட்டவும் இணையதளமும், சமூக வலைதளங்களும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம் என்று ஜெய்சங்கா் பதிலளித்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம்:

ராஜீய மற்றும் சா்வதேச ஆய்வு மையத்தில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கி அதில் இந்தியாவுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா். அடுத்த 15 ஆண்டுகளில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறக் கூடும். அது மட்டுமின்றி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாகவும் இந்தியா உள்ளது. அத்தகைய நாட்டை ஐ.நா. சபையின் முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தா விட்டால், அது அந்த நாட்டை பாதிக்கும். மேலும், ஐ.நா. சபையின் நம்பகத்தன்மையையும் அது பாதிக்கும்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com