மருத்துவத்துக்கான நோபல் பரிசு: செல்கள் பிராணவாயுவை உட்கிரகிக்கும் முறையை கண்டுபிடித்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2019ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் இருக்கும் செல்கள் பிராணவாயுவை எவ்வாறு உட்கிரகிக்கின்றன என்பதை கண்டுபிடித்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு
மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு: செல்கள் பிராணவாயுயை உட்கிரகிப்பதை கண்டுபிடித்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2019ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் இருக்கும் செல்கள் பிராணவாயுவை எவ்வாறு உட்கிரகிக்கின்றன என்பதை கண்டுபிடித்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனில் தலைநகல் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடல்களில் இருக்கும் செல்கள் மற்றும் செல்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை உட்கிரகிக்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஜி கேலின், கிரெக் செமன்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த சர் பீட்டர் ராட்கிளிஃப், ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

செல்களின் வளர்சிதை மாற்றம், செல்களின் அளவுகளுக்கும், ஆக்ஸிஜன் கிடைக்கும் அளவுக்கும் இடையே இருக்கும் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆராய்ச்சியில் அடங்கும்.

புற்றுநோய் உள்ளிட்ட முக்கிய நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகுந்த பயனளிக்கும் என்பதால் இம்மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com