
2019-ஆம் ஆண்டு பெய்ஜிங் உலக தோட்டக் கலைப் பொருட்காட்சியின் நிறைவு விழா 9ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் நடைபெறுகிறது.
5 திங்கள் காலம் நீடித்த இப்பொருட்காட்சி, 93 இலட்சத்து 40 ஆயிரம் பயணிகளை வரவேற்றுள்ளது என்று 8ஆம் நாள் நடைபெற்ற சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில், பெய்ஜிங் உலக தோட்டக் கலைப் பொருட்காட்சியின் அமைப்புக் குழு அறிவித்தது.
பெய்ஜிங் உலகத் தோட்டக் கலைப் பொருட்காட்சி, வரலாற்றில் இது மிக பெரியளவான உலகத் தோட்டக் கலைப் பொருட்காட்சியாகும். 110 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், சீனாவின் 31 மாநிலங்கள் சீனாவின் ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட 120க்கு மேலான நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன என்று சீன வர்த்தக முன்னேற்ற சம்மேளனத்தின் தலைவரும், பெய்ஜிங் உலகத் தோட்டக் கலைப் பொருட்காட்சியின் அமைப்பு குழுவின் துணைத் தலைவரும், பெய்ஜிங் உலகத் தோட்டக் கலைப் பொருட்காட்சியின் செயற்குழுவின் தலைவருமான காவ் யன் அம்மையார் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்