ஈரானுடனான மோதலுக்கு தூதரக ரீதியிலான தீர்வு: அமெரிக்கா வலியுறுத்தல்

ஈரானுடான மோதலுக்கு தூதரக ரீதியில் தீர்வு காண விரும்புவதாகவும் போர் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானுடனான மோதலுக்கு தூதரக ரீதியிலான தீர்வு: அமெரிக்கா வலியுறுத்தல்


ஈரானுடான மோதலுக்கு தூதரக ரீதியில் தீர்வு காண விரும்புவதாகவும் போர் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய எண்ணெய் ஆலையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது. இதைத் தொடர்நது அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக பாரசீக வளைகுடா பகுதியில் கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதையடுத்து, அப்பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 இந்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்க அமெரிக்கா ஆயத்தமாகி வரும் நிலையில்,  அந்த நாட்டுடன் தூதரக ரீதியில் பிரச்னைகளை தீர்க்க விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ கூறியுள்ளதாவது: ஈரானுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கு உண்டான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தூதரக ரீதியில் வழங்கவே அதிபர் டிரம்ப்பும், நானும் விரும்புகிறோம். இதற்காக விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறோம். போர் என்பது தவிர்க்கப்பட வேண்டியதாகும். அமைதியான முறையில் தீர்வு காண அனைத்து வழிமுறைகளையும் ஆராய வேண்டும். அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எண்ணம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com