அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,891 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,891 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அங்கு பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,891 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது வரை 7,38,913 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 39,015 ஆக உள்ளது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 68,285 பேர் மீண்டுள்ளனர்.

ஏப்ரல் 19 ஆம் தேதி நிலவரப்படி 2,41,041 பேர் பாதிப்பு மற்றும் 17,671 இறப்புகள் என நியூயார்க் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக தொடர்ந்து வருகிறது. இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான நியூ ஜெர்சியில் இதுவரை 81,420 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,070 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com