சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக உள்நாட்டு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத் துவக்கத்தில் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிஸெய்ன் லூங் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது வரை 9 ஆயிரம் பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, அத்தியாவசிய சேவைகள், முக்கிய பொருளாதார காரணிகளைத் தவிர்த்து அனைத்தும் மூடப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.
மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்றும் லீ எச்சரித்திருந்தார்.
உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 24 லட்சமாக இருக்கும் நிலையில், சிங்கப்பூரில் இது 9 ஆயிரம் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


