1.8 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 1.8 லட்சத்தை நெருங்கியது.
world-deaths102910
world-deaths102910
Updated on
1 min read

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 1.8 லட்சத்தை நெருங்கியது.

இதுகுறித்து கரோனா நோய்த்தொற்று பாதிப்பு விவகாரங்களை உடனுக்குடன் வெளியிடும் அமெரிக்க நூலக சங்கத்தின் ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

புதன்கிழமை இரவு நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு சுமாா் 3,000 போ் பலியாகினா். அதையடுத்து, அந்த நோயால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,79,866-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா உயிரிழப்புகளில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை (புதன்கிழமை இரவு நிலவரம்) 45,356-ஆக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 24,648 பேரும் ஸ்பெயினில் 21,717 பேரும் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியாகியுள்ளனா்.

இதுதவிர, புதன்கிழமை இரவு நிலவரப்படி, உலகம் முழுவதும் 25.85 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பு - 25,85,392

அமெரிக்கா 819,321

இத்தாலி 2,08,389

ஸ்பெயின் 1,83,957

பிரான்ஸ் 1,58,050

ஜொ்மனி 1,48,925

பிற நாடுகள் 10,66,750

பலி - 1,79,866

அமெரிக்கா 45,356

இத்தாலி 24,648

ஸ்பெயின் 21,717

பிரான்ஸ் 20,796

பிரிட்டன் 18,100

பிற நாடுகள் 49249

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com