மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா நோயாளியே இல்லாத இடமானது வூஹான்

சீனாவில் கரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹானில், கரோன தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா நோயாளியே இல்லாத இடமானது வூஹான்
Updated on
1 min read

பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹானில், கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதன் மூலம் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு வூஹான்  ஒரே ஒரு கரோனா நோயாளி கூட இல்லாத இடமாக மாறியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது.

முன்னதாக, சீனாவில் கரோனா தொற்றால் சுமார் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.4,633 பேர் மரணம் அடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சீனாவில் இதுவரை 82,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 723 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 77 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்.

திங்கள்கிழமை நிலவரப்படி, சீனாவில் புதிதாக மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வூஹானில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகு, தொடர்ந்து மூன்று மாதங்களாக அங்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், கரோனா பாதித்து குணமடைந்த அனைவரும் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com